Sunday, 25 August 2019

முரண்கோடுகள் - எழுதுகிறேன் ஒரு புதினம் . . .


எழுதுகிறேன் ஒரு புதினம் . . .
            சமுதாயம் என்பது சிக்கல்கள் நிறைந்த போராட்டக் களமாகவே பெரும்பாலும் விளங்குகிறது. ஆரவாரமற்ற அமைதியான வாழ்வு பெரும்பாலோர்க்கு அமையாமல்போய்விடுகிறது. தெள்ளிய நீர்ப்பரப்பாய் சலனமற்ற வாழ்க்கை மேற்கொள்ளும் சிற்சிலர் வாழ்விலும் தேவையற்ற எதிர்பாராத சிக்கல்கள் எதாவதொரு வடிவத்தில் வந்துபுகுந்துவிடுவதால் அதைத் தவிர்க்க இயலாமல் அவர்கள் அல்லல்படுவதைக் காணமுடிகிறது. பணம், பதவி, புகழ், போகம் எனும் ஏதாவதொரு போதை மனிதனை அவனது தடுமாறும் மனநிலையைச் சாதகமாக்கிக்கொண்டு அவனுக்குள் புகுந்து அவனைப் பம்பரமாய் ஆட்டுவித்து அலைக்கழிக்கிறது.
            இந்தச் சிக்கல்களிலிருந்து மீள தீர்வுதான் என்ன? மனத்தைத் தெளிவாக வைத்துக்கொள்வதும் எவ்விதக் குழப்பத்திற்கும் சலனத்திற்கும் எந் நிலையிலும் ஆட்படாது இருப்பதுதான்!
            எல்லோர் வாழ்விலும் எங்காவது ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருந்து திடீரென வெளிப்படும் சிக்கலான அவிழ்க்கமுடியாத முரட்டு முடிச்சாய் இருக்கும் ஒரு சமூக அவலத்தைத்தான் இந்த முரண்கோடுகள் மூலம் உங்களுக்கு வரைந்துகாட்ட முயல்கிறேன். ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதன் மூலம் சமூக அவலங்களைத் தீர்வு காண எனை வழிநடத்த வேண்டுகிறேன்.
                                                            அன்பு கலந்த நன்றியுடன்,
                                                                                                                        தங்கள்
நிர்மலா கிருட்டினமூர்த்தி
நூலாசிரியர்
காரைக்கால்
25.10.2008.

No comments:

Post a Comment