முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 7
அவள் பணிக்குச் சேர்ந்த
இரண்டு மாதத்தில் பள்ளியின் ஆண்டுவிழா வந்தது.
ஆண்டுவிழாவின்போது பள்ளிக்குத் தன் மனைவி தாட்சாயணியை
அழைத்து வந்தான் சந்திரன். அவன் மனைவி பிரபலமான
கம்பெனியில் மேலதிகாரியாகப் பணிபுரிந்தாள். கணினித்துறையில் திறமையானவள் என்று பேர்பெற்றவள்.
நல்ல உயரம். உதட்டுக்குச்
சிவப்புச் சாயம். உடலில் மெல்லிதாய் வீசும் மல்லிகை செண்ட் வாசம். ஹை ஹீல்ஸ். பார்க்க
லட்சணமாகவே தெரிந்தாள். கழுத்தில் ஆறு பவுனில் தாலி.
தாலிஎன்றால் கருக மணியும், மாங்காய்,
குண்டு, காசு, நாணல் என்று பல்வேறு உருவத்தில் போடுவார்களே அதெல்லாம் இல்லை. கணவன், மனைவி இருவருடைய புகைப்படத்தையும் வைத்த லாக்கெட். எனவே அது புடவைக்கு
வெளியிலேயே கழுத்திலிருந்து தொங்கியது. இந்துக்கள் பெரும்பாலும் தாலி என்று அதனை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவள் கொஞ்சம் மாடர்ன்
டைப். எனவே தாலியாக லாக்கெட்டை
அணிந்திருந்தாள். சந்திரனுக்கும் அச்செயலில் தவறு என்று எதுவும்
தோன்றவில்லை. அவன்தானே அதனை ஆர்டர் செய்து
வாங்கித் தந்தவன். அவனும் பழைமையான கொள்கைகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளாதவன்.
சுந்தரி மறுநாள் மெதுவாக ஆரம்பித்தாள். 'என்னங்க! பொம்பளைங்கன்னா தொங்கத் தொங்க மஞ்சக் கயித்துல தாலிய கட்டிக்கிடனும். தினமும் அதுக்கு மஞ்ச பூசிக் குளிக்கணும்.
அப்பத்தான் பொண்டாட்டி குளிச்சிட்டு வரும்போதே மஞ்ச வாசம் கமகமன்னு
புருஷன மயக்கும். நாளு கிழமையானா பொம்பளைங்க
விரதம் இருந்து பூஜ பண்ணி பய
பக்தியோட தாலியில குங்குமத்த வெச்சி அத கண்ணுல வொத்திக்கனும்.
சுமங்கலி பூஜ பண்ணனும். விளக்கு
பூஜ பண்ணனும். அப்பத்தான் புருஷன் சௌக்கியமாக நீடூழி வாழமுடியும்.'
'சரியான பத்தாம் பசலியா இருக்கியே. மேனாட்டுல இப்படியா இருக்காங்க? அவங்க புருஷன்லாம் ரொம்பநாள் உயிரோட இல்லையா?' - சந்திரன் சிரித்தான்.
'அந்த ஊர்ல யாரு
புருஷனுக்கு மருவாதி தராங்க. அங்கப் பொம்பளைங்க எத்தன கல்யாணம் வேணா பண்ணிக்கிறாங்க. அப்பறம்
அவன் வாழ்ந்தா என்ன? செத்தா என்ன?' - நன்றாகவே தர்க்கம் செய்தாள் சுந்தரி.
'ஏங்க, உங்க மேடம் மெட்டி
போடாம இருக்காங்க? பொண்டாட்டி மெட்டி போட்டுக்கிட்டு நடந்துவர்றப்போ அதுல இருக்கற சலங்க,
ஜல்லு ஜல்லுன்னு சத்தம்போட்டா புருஷனை மயக்கிப்புடுமாமே!'
'ஏங்க மேடம் மூக்குக்
குத்தாம இருக்காங்க? மூக்குத்தி போட்டுக்கிட்டா லட்சுமி களையா இருக்குமே!'
திருமணமான புதிதில் தன்மனைவியை மூக்குத்திப் போட்டுக்கொள்ளுமாறு அவன் வற்புறுத்தினான். ஆனால்
மூக்குக் குத்துவது பெண்ணடிமைத்தனத்தின் அறிகுறி என்று அவள் வாதிட்டாள். சந்திரனும்
அவளுக்குப் பிடிக்காத ஒன்றை வற்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டான்.
சுந்தரி மூக்கில் எட்டுக் கல் பேசரி போட்டிருந்தாள்.
தன் மனைவி மூக்குத்தி போட்டிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் சந்திரன். அது சுந்தரிக்குப் பொருந்தும்
அளவுக்குத் தன் மனைவி தாட்சாயணிக்கு
பொருந்தவில்லை என்பதாக அவன் மனக்கண்ணிற்குப் புலப்பட்டது.
சுந்தரியின் மூக்கில் வைரக்கல் ஜொலித்தால் நன்றாக இருக்கும் - நினைத்துக் கொண்டான் சந்திரன்.
'ஏங்க . . . ! மேடம் நைலக்ஸ் பொடவ கட்டாம தழையத்
தழைய நூல் பொடவ இல்லன்னா
பட்டுப்பொடவ கட்டினா அவங்க ஒயரத்துக்கு எவ்வளவு எடுப்பா இருக்கும் தெரியுமா?'
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அலுவலகம் போகும் அவசரத்தில் சிந்தடிக் புடவைகளே எளிதானவை என்று அவள் அதனையே உடுத்துவாள்.
பட்டுப் புடவையோ, நூல் புடவையோ கட்டினால்
புடவையின் மடிப்புகளைப் பிடித்துவிட தன் கணவனைத் தினமும்
தொந்தரவு செய்யவேண்டும். காலையில் அவனுக்கும்தானே அவசரம் இருக்கும். சிந்தடிக் புடவைகளை மெயின்டெய்ன் செய்வதும் எளிது. அயர்ன் செய்யவில்லை என்றாலும் கசங்கியிருப்பது தெரியாது. இதைப்பற்றி எல்லாம் சுந்தரிக்கு எங்கே தெரியப்போகிறது? ஏதோ அவள் நினைப்பதே
சரியானது போன்று தன் கருத்தை நிறுவப்
பாடுபட்டாள்.
சந்திரன் சுந்தரிக்குத் தன் மனக் கைகளால்
மாம்பழ நிறமும் அரக்கு பார்டரும்கொண்ட பட்டுப்
புடவையைக் கட்டி அழகு பார்த்தான்.
தினமும் சந்திரனின் மனைவி தொடர்பான ஏதாவது ஒரு விஷயம் எடுத்துக்கொண்டு
ஆராய்ச்சி செய்து மறு பரிசீலனைக்கு உட்படுத்தித்
தன் ஆணித்தரமான முடிவுகளை உரைப்பது சுந்தரியின் பொழுதுபோக்கானது.
அவள் சொற்களுக்குச் சந்திரனும்
மறுப்பு எதுவும் உரைப்பதில்லை.லப்பட்டது.

மறுப்பு எதுவும் உரைப்பதில்லை.
No comments:
Post a Comment