Thursday, 1 August 2019

சொர்க்கத்தில் நவபாரதம் காட்சி 2


சொர்க்கத்தில் நவபாரதம்

காட்சி 2
                நிகழிடம்                    :  எமன் மாளிகைக்குப்  போகும் வழி                        
                நிகழ்த்துவோர்        : எமன், சித்திரகுப்தன்.
***
                சூரியன் நண்பகலில் தன் கிரணங்களை உச்சியிலிருந்து நாலா திசைகளிலும் பாய்ச்சிக் கொண்டிருக்கிறான்.  இருந்தாலும் சந்தனம், சண்பகம், மகிழம், மரமல்லி, மனோரஞ்சிதம், மருதோன்றி, வெண்நொச்சி எனப் பல வகையான மரம், செடிகள் குளிர்ந்த நிழலையும் மணத்தையும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.  சரக்கொன்றை, அசோகு, கொக்கு மந்தாரை முதலிய மரங்கள் பலவண்ண மலர்களோடு வானவில்லைத் தீட்டிக் கொண்டிருக்கின்றன. 
 ***
எமன்   :    சித்திரகுப்தா, என்னுடன் வீட்டிற்கு வா.
சி.கு.    :   பிரபோ, என் இல்லத்தில் சில வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்து விட்டேன். போய்விட்டுச் சிறிதுநேரம் கழித்து வருகிறேனே... !
எமன்:   என்னஎஸ்கேப்ஆகப் பார்க்கிறாயா?  சிவனிடம் என்னைப் பற்றிப் போட்டுக் கொடுக்கிறாயா?  வீட்டிற்கு வா.  சுளுக்கு எடுக்கிறேன்!
சி.கு.   :  இதோ பாருங்கள் பிரபோ!  நான் ஒன்றும் உங்களைப் பற்றி எதுவும்போட்டுக் கொடுக்கவில்லை. பழைய முறைகளை எல்லாம் புதுப்பிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.  நீங்கள் இப்படியெல்லாம் என் மீது குற்றம் கண்டுபிடித்தால் உங்களைப் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிவரும்.
எமன்                 : ஓஹோ . . . ! புதிதாக வேறு இரகசியத்தை வெளிப்படுத்தப் போகிறாயா?  என்ன அது?
சி.கு.                   : ஓர் அல்பசாக்லெட்டிற்காக ஒரு பெண்ணின் உயிரை எடுக்காமல் விட்டுவிட்டு வந்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன்.  அதுவும் கேவலம் எச்சில்சாக்லெட்டிற்காக!
எமன்                 : ஏய், ஏய் . . . , என்னபுருடாவிடுகிறாய்?
சி.கு.:  நான் ஒன்றும் புருடா விடவில்லை.  வேண்டுமானால் என்னிடமுள்ளசி.டி.’யைப் போட்டுப்பாருங்கள்.
                                (வீட்டை அடைகிறார்கள்.  சி.டி.’யைடிவிடியில் போட . . . .)
எமன்  : ஏய், என்ன இது?  இது ஏதோ ஒருசாக்லேட்விளம்பரம்!  அதற்கு என்னைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்! இதில் சிறிதளவுகூட உண்மையே இல்லை.  நான் இந்தப் பெண்ணை முன்பின் பார்த்ததுகூட கிடையாது.  போயும் போயும் ஓர் எச்சில்சாக்லேட்சாப்பிடுவதாக என்னைப் பூலோகத்தினர் இப்படிக் கேவலப்படுத்தி விட்டார்களே! கர்மம்! கர்மம்!!
சி.கு.  :  அது போகட்டும்.  இதைச் சர்வேஸ்வரனிடம் காட்டினால் உங்கள் கதி என்னவாகும் என்று யோசித்தீர்களா?
எமன்                 :               ஒன்றும் ஆகாது!  நான் அப்பெண்ணின் மரணக் கணக்கைக் காட்டி இது போலியானது என்பதைச் சர்வேஸ்வரனுக்குப் புரிய வைத்துவிடுவேன்.
சி.கு.                   :               நீங்கள் இந்த வழியில் போனால் எனக்கு வேறு வழி தெரியாதா என்ன?  நீங்கள் அற்பபாப்புலாரிட்டிகாக தேவலோகத்து நியதிகளை யெல்லாம் மீறி பூலோகத்தில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணி புரிந்தீர்கள்  என நான் குற்றம் சாட்டுவேன்.
எமன்                 :               இதோ பார்.  யாராவது காதில் பூ வைத்திருந்தால் அவரிடம்  போய்ச் சொல்.  தாமே பெரும்பணம் செலவு செய்து தமக்காகப்போஸ்டர்ஒட்டிக்கொள்வதும்கட்-அவுட்வைத்துக் கொள்வதும்வாழ்க! வாழ்க!’ என்று கோஷம் போடச் சொல்வதும் தமக்கு மாலை மரியாதை செய்யச்செய்து பிறந்தநாள் கொண்டாட வைப்பதும்  பூலோகவாசிகள் வேலை. நான் ஒன்றும்பாப்புலாரிட்டிதேடவில்லை;   நடிக்கவும் இல்லை.
சி.கு.                   :               இதையெல்லாம் உங்கள் சர்வேஸ்வரனிடம் சொல்லுங்கள்!
எமன்                 :               சித்திரகுப்தா, உண்மையைச் சொல்!  நான் எப்பொழுதும் உன்னுடன்தான் இருக்கிறேன். ‘வீடு விட்டால் அலுவலகம். அலுவலகம் விட்டால் வீடுஎன்பது என் வாழ்க்கை ஆகிப்போனது.  மேலும்,  நான் வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை என்று எமி  வேறு கோபித்துக் கொள்கிறாள். உனக்குத் தெரியாமல் நான் எங்கும் சென்றதும் இல்லை.  பிறகு எப்படி இது சாத்தியம்?  தயவுசெய்து உண்மையைச் சொல் சித்திரகுப்தா!
சி.கு.                   :               போனால் போகிறது என்று உண்மையைச் சொல்கிறேன்.  ஆனால் ஒரு நிபந்தனை!  இனிமேல் என்னை மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது சரியா?
எமன்                 :               அப்படியே ஆகட்டும்!
சி.கு.                   :               நாம் சென்ற வாரம் அமாவாசை அன்று  ஓர் உயிரை எடுத்து வந்தோமே, ஞாபகம் இருக்கிறதா?
எமன்                 :               இதென்ன கேள்வி? நாம் தினந்தோறும் எத்தனையோ உயிர்களை எடுத்து வருகிறோம்.  திருப்பதியில் மொட்டையை அடையாளமாகக் கூறுவதுபோல் இருக்கிறது உன் வினா!
சி.கு.                   :               அமாவாசையன்று நல்ல ஆரோக்கியத்தோடு இருந்த ஒரு நரனின் உயிரை எப்படி எடுப்பது? என்று நாம் வெகுநேரம் யோசித்தோம்.  அன்றுதிருஷ்டிகழிப்பதாகக் கூறிக்கொண்டு கடைத் தெருவில் ஆங்காங்கு பூசணிக் காய்களை உடைத்திருந்தனர். உடைந்து சிதறிக்கிடந்த பூசணிக் காயில் அந்த நரனின் வண்டி ஏறிச் சறுக்குமாறு செய்துத் தலையில் அடிபடவைத்து உயிரை எடுக்கவில்லையா?
எமன்                 :               ஐயோ, ஏன் அதை ஞாபகப் படுத்துகிறாய்?  இவ்வாறு பூசணிக்காய் உடைத்தால்  திருஷ்டிகழியும் என்று யார் கதைகட்டினார்களோ?  இப்படி நடு வீதியில் உடைத்துப் போவோர் வருவோர் மண்டையையும் உடைக்கிறார்கள்!  எத்தனைப் பேர் அந்தச் சாலையில் கீழே விழுந்து அடிபட்டார்கள் என்று பார்த்தாய் அல்லவா?
சி.கு.                   :               அடடா, உயிர் பறிக்கும் எமனுக்குத்தான் மனிதர்கள் மேல் எவ்வளவு அக்கறை . . . ! ஆனால், இந்த மக்கள் எப்பொழுது மற்றவர்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொண்டார்கள்?
எமன்                 :               சரிசரி.  என் கதைக்கு வா!
சி.கு.                   :               அங்குதான் ஒருவீடியோகடையைப்  பார்த்தேன்.  அங்கே ஒரு சாதனத்தில் ஏற்கெனவே எடுத்த படத்தில் சில முகங்களை மாற்றி ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்.
எமன்   :   அப்படியா? நான் ஒன்றும் கவனிக்க வில்லையே!
சி.கு.   :  அதனால்தான் நீங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் எருமையே கதி என்று இருக்கிறீர்கள்!  உங்களால் எங்களுக்கும் அதே கதிதான்!
எமன்  :   சந்தடி சாக்கில் என்னையே தாக்குகிறாயா?
சி.கு.   :   பிரபோ, விஷயத்தைக் கேளுங்கள்!  அந்தக் கடைக்கு ஓர் அம்மா வந்தார்.  அவரது மகன் தனது பள்ளி அடையாள அட்டையைத் தொலைத்து விட்டானாம். உடனடியாக அதைப் போன்ற வேறொரு அட்டையைத் தயார்செய்து தருமாறு கடைக்காரனிடம் கேட்டார். 
எமன்                 :               இப்பொழுதுதான் நிழற்படம் எடுக்கும் கலை சிறப்பாக வளர்ந்துவிட்டதே! ஒரு புகைப் படம் எடுத்துத் தந்தால் போகிறது.
சி.கு.                   :               அந்தப் பையன் சீருடை அணிந்து. . . புதிதாகப் புகைப்படம் எடுத்து. . . அதன் பின்னர்ப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்து வாங்கி . . .  - இதற்கெல்லாம் நெடுநேரம் ஆகுமாம்.  அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியராம்.  வேலைக்குப் போவதால் இதுமாதிரி சில்லரை வேலைகள் செய்ய அவருக்கு நேரமில்லையாம்.  அதனால் ஏதாவதுகோல்மால்செய்துரெடிமேடா அட்டையைத் தயார் செய்யுமாறு கேட்டார்.
எமன் :  ம், அப்புறம்?
சி.கு.  :  நான் என்ன பூலோக மனிதரின் பாட்டி கதையா சொல்கிறேன்! ‘உம்கொட்டிக்கொண்டு?
எமன்                 :               பூலோகத்தில் பாட்டி கதை சொல்வதெல்லாம் இப்போது பழங்கதை ஆகிவிட்டதப்பா!  கதை சொல்வதற்குப் பாட்டிகள் குடும்பத்தில் ஒன்றாக வசிப்பது இல்லை. அவர்களெல்லாம் முதியோர் இல்லங்களில் அல்லவா இருக்கிறார்களாம்!  அப்படியே ஒன்றாக இருந்தாலும் அந்தப் பாட்டிகளுக்குக் கதை சொல்லவும் தெரிவது இல்லையாம் - தெரிந்தாலும் கதை  சொல்லும் பொறுமையும் இல்லையாம்.  அவர்கள்தான்மெகா சீரியல்பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாமே!
சி.கு.                   :               நான் சொல்லவந்த விஷயத்தைச் சொல்ல விடாமல் நீங்கள் வேறுமெகா சீரியலில் விடுகின்றகமர்ஷியல் பிரேக்போல அடிக்கடி தடம் மாறிவிடுகிறீர்கள்!
எமன்                 :               சரி சரி, நடந்ததைச் சொல்லு சித்திரகுப்தா.  பிகு பண்ணாதே!
சி.கு.                   :               அந்தக் கடைக்காரர் உடனே தனதுகம்ப்யூட்டர்சாதனத்தில் வேறொரு பையனின் அட்டையைப் பதிவுசெய்தார்;  அந்த அம்மாவின் மகனின் பழைய புகைப்படத்தைப் பதிவு செய்தார்;  அடையாள அட்டையில் மகனின் முகத்தைக் கொண்டுசேர்த்தார்;  வேலை முடிந்தது!  பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று கையெழுத்து வாங்காமலேயே அட்டை தயாராகிவிட்டது;  அட்டையைத் தொலைத்த மகனின் தவறும் மறைக்கப்பட்டுவிட்டது;  தாயின் நேரமும் மிச்சமாகி விட்டது!
எமன்  : ஒரு சாதாரண விஷயத்திற்காக அந்த அம்மா இப்படி ஓர் ஏமாற்று வேலை செய்யலாமா?  அதுவும் பேராசிரியர் என்கிறாய்! அவர்களுக்கு ஏன் புத்தி இப்படிப் போகிறது?
சி.கு.   :    படித்தவர்களுக்குத்தான் இப்படிப்பட்டபிராடுவேலைகள் எல்லாம் நன்றாகச் செய்யத் தெரியும் தலைவா!
எமன்  :   என்னது?
சி.கு.   :   சாரி’!  சே. . . !  மன்னிக்கவேண்டும் பிரபோ!
எமன்   : வரவர உன் பேச்சும் சரியில்லை - உன் நடத்தையும் சரியில்லை.  இனிமேல் நீ தனியாகப் பூமிக்குச் செல்வதை நிறுத்திக் கொள்.  அப்படியே போனாலும்போனோமா வந்தோமாஎன்று இருக்க வேண்டும்.  அந்த நரர்களைப் பார்த்துப் பார்த்து நீ மிகவும் கெட்டுப் போய்விட்டாய்.  உனக்கும் பொய்ப் பித்தலாட்டங்கள் வந்துவிட்டன. இந்தப் படத்தையும் அப்படித்தான் தயார் செய்தாயா?
சி.கு.                   :               ஆமாம் பிரபோ.  ஆனால் இந்த விளம்பரம் எல்லாம் உண்மைதான். அதில் எமனாக . . . அதாவது உங்கள் தோற்றத்தில் நடித்தவரின் முகத்தை மட்டும் மாற்றி உங்கள் முகத்தைப் பொறுத்தித் தந்தான் கடைக்காரன்.  ஆனால், தேவை ஏற்பட்டால்தான் இதைப் பயன்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன் பிரபோ! . . .   நான் இதைப் பயன்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் ஏற்படுத்திவிடாமல் இருந்தால் சரி!
எமன்                 :               இவ்வாறு பேசுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை?  இப்படி ஏதாவதொரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை மிரட்டுவ தெல்லாம் குறுக்குப் புத்திகொண்ட மானிடர் சிலரின் வேலை. தனிமனித சண்டை சச்சரவுகளைப் பெரிதுபடுத்தி, எதிரிகளைப் பழி தீர்த்துக்கொள்ள, வேண்டுமென்றே எதிரிகள் தங்கள் சாதிப் பெயரைக் கேவலப்படுத்தி விட்டனர் என்று கூறி கலகம் செய்வதும், மதத்தைக் கேவலப்படுத்தி விட்டார்கள் என்று பொய்ப்பிரசாரம் செய்து கலவரம் ஏற்படுத்துவதும் அவர்கள் கைக்கொள்ளும் சில அபாயகரமான ஆயுதங்கள். பெண்களை இழிவு படுத்த வேண்டுமென்றால் அவர்களின் கற்புக்குச் சவால் விடுவதாக அவதூறு கிளப்பிவிடுகின்ற பேடிகளும் பூலோகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இத்தகைய ஈனப் பிறவிகளை மாறுகை, மாறுகால் வாங்கி நடைப் பிணமாக ஆக்கினால்தான் இவர்களுக்கெல்லாம் புத்திவரும்.  அவர்களைப் பார்த்தாவது மற்றவர்கள் அந்தத் தவறைச் செய்யாமல் இருப்பார்கள்.
சி.கு.  : என்னை மன்னித்துவிடுங்கள் பிரபோ.  இனிமேல் இத்தகைய கீழ்த்தரமான வழிகளைக் கனவிலும் கருதமாட்டேன்.
எமன்  :  சரி சரி விட்டுத்தள்ளு! நீ நாளைக்கு மரணக் கணக்குப் புத்தகங்கள் அனைத்தையும் மறக்காமல் சபைக்கு எடுத்து வந்துவிடு.  சர்வேஸ்வரன் கேட்கும் வினாக்களுக்கு பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டு நின்றால் எல்லோர் முன்னிலையிலும் மகா கேவலமாக இருக்கும்.
சி.கு.                   :               பிரபோ!  நாளைக்கு முடியாது பிரபோ!  நிறைய வேலை இருக்கிறது. ஈசன்தான் இரண்டு நாட்கள்கெடுகொடுத்துள்ளாரே.  அதனால் நாளை மறுநாள் பார்த்துக் கொள்ளலாம்.
எமன்                 :               நல்ல சுறுசுறுப்பு!  அரசு அலுவலர் போன்றே வேலைகளைத் தாமதித்துச் செய்யக் கற்றுக் கொண்டாய்!  வேலைகளை உடனுக்குடன் முடிக்காமல் கிடப்பில் போடுவது தான் அவர்கள் பாணி அல்லவா!
                சி.கு.                   :               பிரபோ, அவர்கள் மீது ஏன் குற்றஞ் சுமத்துகிறீர்கள்?
எமன்                 :               நடப்பதைத்தான் சொன்னேன். அவர்கள் மேசைக்குவரும் கோப்புகளை அவ்வப்போது முடித்தால்தானே மக்களுடைய பிரச்சினைகள் தீரும்.  ஒவ்வொருவரும்இது அடுத்தவர் பிரச்சினைதானே!  நமக்கென்ன?’ என்று செயல்படுவதால் எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது தெரியுமா?
சி.கு.                   :               அப்படிச் சொல்வதற்கில்லை பிரபோ! பணிச்சுமைக்கு ஏற்பக் காலா காலத்தில் தேவையான அலுவலர்களைப் பணிநியமனம் செய்யாமல் அரசு காலம்கடத்துவதுதான் இதற்குக் காரணம் பிரபோ!
எமன்                 :               பணியில் இருப்பவர்கள் அனைவரும் கடமையுணர்வோடு காரியமாற்றுகிறார்களா என்ன?
சி.கு.                   :               அதற்கென்ன செய்வது பிரபோ? கடமை உணர்வோடு உழைத்து வேலையை முடிப்பவர் களுக்குத்தான் மேலும் மேலும் வேலைகள் திணிக்கப்படுகின்றன. அது மட்டுமா? அப்படிப் பட்டவர்களுக்கு ஆபத்து, அவசரம் என்றால்கூட பணித் தேக்கம் காரணம் காட்டப்பட்டு விடுப்பு  மறுக்கப்படுகிறது. 
எமன்                 :               ஐயோ பாவம்!
சி.கு.                   :               இன்னும் கேளுங்கள்! அவர்கள் பணிந்து செல்பவராய் இருந்தால் அவர்கள் வேலையில் அதிகாரிகள் குறை கண்டுபிடித்துமெமோகொடுக்கிறார்கள். ஆனால் வேலையைத் தட்டிக் கழித்து விட்டேத்தியாகத் திரிபவர்களுக்கு ராஜ மரியாதைதான்! அவர்களைக் கண்டு அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். அவர்களைத் தட்டிக்கேட்கும் தைரியம்கூட இருப்பதில்லை பிரபோ! இதனால் கடமை செய்பவர்கள் ஏமாளிகள்; அடாவடித்தனம் செய்யும் கயவர்கள், புத்திசாலிகள் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
 எமன்                                :               அப்படியே அதிகாரிகள் தட்டிக்கேட்டால் அவர்களைப் பற்றிமொட்டைப் பெட்டிஷன்மேலதிகாரிகளுக்குச் சென்றுவிடும் என்ற பயம்தான். நீ கூடத்தான் சிறிது நேரத்திற்கு முன்னால் என்னை இப்படிப் பயமுறுத்தினாய்!
சி.கு.                   :               உண்மைதான்.  எங்கும்  நல்லதைக் காட்டிலும் கெட்டதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!
எமன்                 :               சித்திரகுப்தா, நீ தெரியாமல் பேசுகிறாய்! நன்றாகப் பணி செய்பவருக்கு அவ்வப்போது பரிசுகளும் விருதுகளும் அளிக்கப்படு கின்றனவே? பள்ளிகளில் நன்றாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்குநல்லாசிரியர் விருதுகூட அளிக்கிறார்களாமே! உனக்குத் தெரியுமா?
சி.கு.                   :               நீங்கள் சரியான ஏமாளிதான் பிரபோ!  எதையும் விகல்பமில்லாமல் அப்படியே நம்பி விடுகிறீர்கள்!
எமன்                 :               ஏன் சித்திரகுப்தா, நான் சொன்ன செய்தி பொய்யான வதந்தியா?
சி.கு.                   :               செய்தி என்னவோ உண்மைதான்!  ஆனால் விருது, பரிசுகளை வாங்க வேண்டுமாயின் வெறும் கடமையை மட்டும் செய்து கொண்டிருந்தால் போதாது.  காலைப் பிடிக்கும் திறமையும் வேண்டும்.
எமன்                 :               அப்படியென்றால் விருது பெற்றவர்கள் எல்லாம்    போலிகள் என்றா கூறுகிறாய்?
சி.கு.                   :               அப்படியும் சொல்வதற்கில்லை பிரபோ!  சில நேரங்களில் தகுதியானவர்களுக்குத்தான் விருதுகள் சென்று சேர்கின்றன. ஆனால் பல சமயங்களில் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் பாரபட்சம் பார்த்துத் தகுதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் என்று நல்லவர்கள் புலம்பிக் கொண்டிருப்பதைக் கேள்விப் பட்டேன் பிரபோ! இன்னும் சிலர் இருக்கிறார்கள் பிரபோ.   அவர்கள். . .
எமன் :   அவர்கள்மேல் என்ன புகார் வைத்திருக்கிறாய் சித்திரகுப்தா?
சி.கு.  :  அவர்கள் தாங்களாகவே பல பெரிய மனிதர்களை அணுகி. . . மாலைமரியாதை செய்து. . . தங்களுக்கு விருதுகளை அளிக்குமாறு செய்து. . .  தங்கள் பெயருக்கு முன்னால் அவற்றைப் போட்டுக்கொண்டு. . .  செருக்கித் திரிகிறார்களாம்!
எமன்  :      உண்மையாகவா? ? ?
சி.கு.  :  நானென்ன பொய்யா சொல்கிறேன்? இப்படித்தான் தமிழைப் பிழையின்றி எழுதத் தெரியாத பலர்கவிஞர்என்று போட்டுக் கொள்கிறார்களாம். ‘கவிச்சக்கரவர்த்தி’, ‘கவிக்கோ’, ‘கவி சிகாமணி’, ‘கவித்தென்றல்’, ‘இலக்கியச் சுடர்இலக்கிய . . .
எமன் :  சித்திரகுப்தா! பார்த்து பார்த்து! சற்றே மூச்சு விடு! மூச்சு நின்றுவிடப்போகிறது. . . !
சி.கு.  :   இப்படிக் கணக்கில்லாமல் இந்தக் கலி காலத்தில் புவியில் விருதுகள் பெருகிவிட்டனவாம் பிரபோ!
எமன்  :   நீ இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே! உனக்கு என்ன விருது வேண்டும்?                 
சி.கு.  :  ஆளைவிடுங்கள் சாமி! எனக்கு எந்த விருதும் வேண்டாம்.  நீங்கள் என் திறமையைப் புரிந்து கொண்டாலே போதும்! 
எமன்  :  உன் திறமை எனக்குப் புரியாமலா? ‘அலுவலர்கள் வேலை செய்யாமல் கால தாமதம் செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்குப் போய் கோபித்துக் கொண்டாயே!
சி.கு.    : அலுவலர்கள் மட்டும்தான் காலம் கடத்து கிறார்களா என்ன?  அதிகாரிகள் கூடத்தான் மற்றவர்களுடைய கடனுதவி, பதவி உயர்வு, படிநிலை உயர்வு போன்றவற்றை எவ்வளவு காலம் தாழ்த்தித் தரலாம் என்று பார்க்கிறார்களாம்.  ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து அடுத்த படிநிலையில் ஒருவர் பெறவேண்டிய உயர்நிலையையும் அதனால் பெறக்கூடிய வருமான உயர்வையும் ஆண்டுக் கணக்கில் தள்ளிப்போட்டுப் பல நினைவூட்டல் கடிதங்களுக்குப் பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார்களாம். அதன்பிறகு அது நியமனத்திற்கு வரும்போது அந்தக் குறிப்பிட்ட நபர் அடுத்த படிநிலைக்குச் செல்ல வேண்டியவராய் இருப்பார். மற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகளைக் காலத்தோடு நடைமுறைப் படுத்துவதற்காகத்தான் தமக்குப் பதவியும் பொறுப்பும் கொடுக்கப்பட்டன  என்ற கடமையுணர்வு அவர்களுக்கு இருக்கிறதா என்ன? அப்பதவிக்குரிய அதிக சம்பளத்தை மட்டும் பெற்றுக்கொண்டு இப்படித் தங்கள் பதவிக் காலத்தை வீணே கழிப்பவரை என்னென்பது பிரபோ?
எமன்                 :               ஆக மொத்தத்தில் அதிகாரிகளும் அலுவலர் களும் இணைந்து செயல்பட்டால்தான் காலா காலத்தில் பெறவேண்டிய சலுகைகளையும் உரிமைகளையும் தகுதியுடையோர் பெறமுடியும்;  இல்லையென்றால் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான் என்கிறாய்! 
சி.கு.   :  ஆமாம் பிரபோ!
எமன்   :    சரி நம் கதைக்கு வா.
சி.கு.   :  பிரபோ, நமது பணி நிலவரத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதை எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும் உங்கள் . . . 
எமன்   :  சரி, சரி, இழுக்காதே.  உன் இஷ்டம் போல் செய்.  கணக்குப் புத்தகங்களைச் சுமந்துவர நம் எருமைகளை ஓட்டிச்செல். வேண்டாம் வேண்டாம்!  அது சரிப்பட்டுவராது! வேலை இன்னும் தாமதமாகும்.  தேவேந்திரனிடம் நான் கேட்டதாகச் சொல்லி பத்துப் பதினைந்து யானைகளைப் பெற்றுக் கொள். அவரிடம் பணிபுரியும் பொறுப்பும் திறமையும் உள்ள ஐம்பது பணியாட்களையும் அழைத்துக் கொள்.
சி.கு.    : ஆகட்டும் பிரபோ! 
எமன்  :    ஒரு புத்தகத்தையும் மறந்து விட்டு விடாதே.  புரிகிறதா?
சி.கு. :  என்ன? எல்லாக் கணக்குப் புத்தகங் களையும் கொண்டுவர வேண்டுமா பிரபோ?
எமன்  : சர்வேஸ்வரன் கணக்குப் பார்த்துச் சுமார் பதினைந்து ஆண்டுகள் இருக்கும் சித்திரகுப்தா.  கடைசியாகக் கணக்குப் பார்த்துக் கையொப்பம் இட்ட நாள் எது என்று பார்.  அதன் பிறகுள்ள கணக்குப் புத்தகங்களைக் கொண்டுவாயேன்!
சி.கு.                   :               சரி பிரபோ.  (மனத்திற்குள் முணுமுணுத்தல்) அப்படியென்றால் எனக்கு இரண்டு நாட்கள் விடியவிடிய வேலை இருக்கும். இன்று ஓய்வெடுத்துக்கொண்ட மாதிரிதான்!
எமன்    :  என்ன முணுமுணுக்கிறாய்?
சி.கு.  : ஒன்றுமில்லை பிரபோ. . .  அப்படியே ஆகட்டும்என்று சொன்னேன் பிரபோ!
                                (சித்திரகுப்தன் வெளியேறுதல்)
எமன் :  (தனிமையில்) வேலைக்காரர்களிடம் வேலை வாங்குவது எவ்வளவு சிரமான வேலை என்பது அவர்களிடம் வேலை வாங்கும்போதுதான் தெரிகிறது. அவர்களிடம் கெஞ்சுவதைவிட அவ் வேலையை நாமே செய்துவிடலாம் போல் தோன்றுகிறது.  அவர்களுக்குரிய வேலையைச் செய்யச் சொன்னால் சலித்துக் கொள்கிறார்கள்!  இவர்களுக்கு  வேலை வாய்ப்பு வேண்டும்; பணி நிரந்தரம் வேண்டும்; பதவி வேண்டும்; ‘வேலையில் இருக்கிறேன்என்று சொல்லிக்கொள்ளும்பந்தாவேண்டும்.  ஆனால் வேலை மட்டும் செய்யச் சொல்லக்கூடாது.  காலம் ரொம்பத்தான் கெட்டுப்போச்சு!

***

No comments:

Post a Comment