மழைப் பத்து
மழை
இறங்கியது
நிலமகள்
விரித்தாள்
வெண்குடை!
வெடியோசை,
தீவைப்பு
பொதுவுடைமைப்
போராட்டம்
மழை!
பன்னீர்த்
தெளிப்பு
பட்டாசு
வெடிப்பு
தம்பதியாகும்
முகில்கள்!
கண்கள்
விரியும்
காதல்
நடனம்
மயில்!
இடிஇடியெனச்
சிரிக்கிறது
மழை!
மனிதர்க்காக
மழையிடம்
கையேந்தி
யாசிக்கின்றன
மரங்கள்!
பற்றி
எரியும் வெம்மை
தீயணைப்பு
வண்டி
மழை!
வெங்கல
வானில்
முகில்
யானைகள்
இடி!
மின்னின
வைரங்கள்
பேருந்துக்
கண்ணாடியில்
தூறல்!
வான
மருத்துவமனை
மேகப் போர்வைகள்
வெளுத்து
வாங்குகிறது!
நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா
, நற்றமிழ்த்
துளிப்பா
நானூறு
காரைக்கால்
: விழிச்சுடர்ப் பதிப்பகம்,
2017, 43-44.
No comments:
Post a Comment