காற்றுப் பத்து
காற்றின்
தலைசீவி
விடுகிறது
துத்தி!
காற்றிடம்
புலம்புகின்றன
மரங்கள்!
காற்று
ஆடும்
போ-போ விளையாட்டு
விழுந்த
வாழைமரம்!
கள்ளிச்செடி
முட்களில்
குத்திக்கொண்டு
அலறுகிறது
காற்று!
காற்றில்
கலந்தஇசை
பிரிக்கும்
சல்லடை
புல்லாங்குழல்!
பனைமரம்
விசிறி
விடுகிறது
கோடைக்கதிரவன்!
தாவணி
அசைத்துக்
கவிதை
வரைந்தது
காற்று!
காற்றைக்
கடைகிறது
காற்றாலை
மின்சாரம்!
காதோரம்
கிசுகிசுப்பு
சன்னலிடுக்கில்
காற்று
பேருந்து!
வானில்
பறந்தாலும்
வாலாட்டும்
பிழைப்பு
காற்றாடி!
நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா
, நற்றமிழ்த்
துளிப்பா
நானூறு
காரைக்கால்
: விழிச்சுடர்ப் பதிப்பகம்,
2017, 51-52.
No comments:
Post a Comment