தீப் பத்து
சிதை
எரிகிறது
செக்கர்
வானம்!
மேடையில்
தீ
வீட்டில்
கண்ணீர்
பெண்!
சாம்பலாகும்
உழைப்பு
கனவில்
கந்துவட்டிக்காரன்
கரியாகும்
பட்டாசு!
குடிசைகளைக்
கபளீகரம்
செய்கிறது
அரசியல்
தீ!
அணையாமல்
சுடுகிறது
நாக்குத்
தீ!
பற்றுவதற்கு
முன்
குளிர்கிறது
தீ
பெட்ரோல்!
அணைக்க
இயலாமல்
உள்ளுக்குள்
எரிகிறது
பிரிவு!
தீ வைப்பு
மகிழ்ந்தனர்
மக்கள்
வாணவேடிக்கை!
ஆடவர்க்கும்
விதித்திடுவோம்
தீக்குளிக்கும்
கற்பு!
பூவாய்ச்
சொரிந்தாலும்
சுடுகிறது
நெருப்பு
இலவசங்கள்!
நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா
, நற்றமிழ்த்
துளிப்பா
நானூறு
காரைக்கால்
: விழிச்சுடர்ப் பதிப்பகம்,
2017, 49-50.
No comments:
Post a Comment