நிலாப் பத்து
வான்மகளின்
தேமல்
தேய்த்தாள்
சந்தனச்சோப்பு
நிலா!
தெறித்தன
வைரங்கள்
நிலவுப்
பதக்கத்திலிருந்து
நட்சத்திரங்கள்!
கருப்பு
நெற்றியில்
சந்தனப்
பொட்டு
நிலா!
மாதமொருநாள்
கடன்வாங்கா
விரதம்
அமாவாசை!
கவிதை
வானில்
அமாவாசையிலும்
நிலா!
தூங்கித்தூங்கி
விழிக்கிறது
நிலா!
பிள்ளைத்தமிழ்
விட்டு
துளிப்பாவில்
தவழ்கிறது
பிள்ளை
நிலா!
ஒரே
தலைவன்
எதிர்க்கட்சிக்
கூட்டணியில்
சந்திரன்!
தோற்கத்
தோற்க
வெல்லும்
முயற்சி
முழுநிலா!
வீட்டிற்குள்
கிணற்றைத்
தேடுகிறாள்
நிலா!
நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா
, நற்றமிழ்த்
துளிப்பா
நானூறு
காரைக்கால்
: விழிச்சுடர்ப் பதிப்பகம்,
2017, 41-42.
No comments:
Post a Comment