Thursday 11 July 2019

சாளரம்


சாளரம்
உவகையின் சாளரம் உதட்டின் புன்னகை
துன்பச் சாளரம் பெருகும் கண்ணீர்
பொறாமைச் சாளரம் பொங்கும் எள்ளல்
நட்புச் சாளரம் தக்கதோர் உதவி
அறிவுச் சாளரம் ஆழ்ந்த அடக்கம்
கல்விச் சாளரம் உயர்ந்த  மதிப்பெண்
கற்பனைச் சாளரம் கவிதைகள் குவிப்பு
தீமைச் சாளரம் பொய்மைப் பூச்சு
ஏழ்மைச் சாளரம் நியாயவிலைக் கடை
பஞ்சச் சாளரம் வறண்ட நிலங்கள்
தேர்தல் சாளரம் தெருமுனைக் கூட்டம்
குடியின் சாளரம் நடைதள் ளாட்டம்
நீட்டின் சாளரம் தற்கொலைச் செய்தி
பசுமைச் சாளரம் தரைபடு மழைத்துளி
விசும்பின் சாளரம் தண்ணிய நிலவு
குசும்பின் சாளரம் கேலிச் சித்திரம்
நசிவின் சாளரம் சாலை மறியல்
பசியின் சாளரம் ஊழல் அரசே!

No comments:

Post a Comment