Friday 19 July 2019

வினாவைத் தொலைத்த விடை

வினாவைத் தொலைத்த விடை


ஏன்? ஏன்? ஏன்?
வினாக்களின் எக்காளம்
விடைதெரியா சூனியத்தில் . . .


நான் யார;?
செய்தது சரியா? தவறா?
செயலின் கர;த்தா நானா? சு+ழலா?
பெற்ற வெற்றி தோல்வியா?
தோல்வியென நினைத்தது வெற்றியா?

எத்தனை எத்தனை வினாக்கள்
தளர்நடைபோடும்
வினாக்களின் அணிவகுப்பு!
நினைவாடையில் பற்றிய
இலந்தைச்செடியின் முட்களாய்க்
கேள்விகள் . . . கேள்விகள் . . .
தெளிவிக்கத் தெளிவிக்கக்
குழம்பிப்போய் . . .
விடைமீன்கள்
சேற்றைத் துளைத்துத்துளைத்து
உள்நுழைந்து
கண்ணிற்குப் புலப்படாமல் . . .
வி‘யமறியாதவரிடம்
வீறாப்பாய்
இட்டுக்கட்டிய சப்பைக்கட்டுகள்
விவேகிகள் முன்னால்


சரிந்துபோய் . . .
சரிசெய்யும் பிரையாசை
சகதிப் படுகுழியில்
குட்டியானையாய்ச்
சறுக்கிச் சறுக்கிச் சலித்துச்
சாய்ந்து போகிறது

இனிப்பான மேல்பூச்சு இடஇட
தோலுரிந்து இளிக்கின்றன
கசப்பான உண்மைகள்!

யோசிக்க யோசிக்க . . .
புரிந்ததும் புரியாததும்
தெரிந்ததும் தெரியாததும்
அறிந்ததும் அறியாததும்
அத்தனையும் மாயையாய் . . .

நிகழ்வுகளின் காரணங்களை
உரிக்க உரிக்க
வெங்காயத் தோல் மூட்டைகளாய் . . .
விடைகளைத் தேடித்தேடி
அலுத்தபோது


வினாவே மறந்துபோனது!



No comments:

Post a Comment