காதலிக்கும்போது
கழு தை என்று
செல்லமாய்த் தட்டினான்
கண்கள் குளமாயின
கண்ணீர் முத்துகளைக்
கையில் சேகரித்தான்
கழுதை என்றால்
அழகான பெண்ணென்ற
அகராதி அர்த்தத்தால்
ஆலாபனை செய்து
அகங்குளிர வைத்தான்
இப்போதும் அடிக்கடி
கழுதை என்று
கத்துகிறான் எனைப்பார்த்து
அழகான பெண்தானே
என்றுநான் கேட்டால்
‘அசடே
அதற்கும் உனக்கும்
இரண்டுகால் வித்தியாசம்’
என்றுசொல்லி
அழுகைக்கு
அடித்தளமிடுகிறான்!
(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன்
கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை
என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)
No comments:
Post a Comment