அரிவை
ஆத்திசூடி
1. அன்பே அழகுணர்
2. ஆதிக்கம் அழித்திடு
3. இல்லறம் போற்றிவாழ்
4. ஈடிலா
திறன்வளர்
5. உறவுகள் காத்துவாழ்
6. ஊர்க்கு உதவிடு
7. எதிரியை எடையிடு
8. ஏழ்மை விரட்டு
9. ஐயம் தெளிந்திடு
10. ஒப்புர
வறிந்திடு
11. ஓதுதல் கடைப்பிடி
12. ஒளவை சொல்நட
13. கண்ணீர் விட்டொழி
14. காட்சிப் பிழைதெளி
15. கிடைப்பதில் மனம்மகிழ்
16. கீழோர் உறவறு
17. குறிக்கோள் வாழ்வுகொள்
18. கூன்மனம் விட்டொழி
19. கெடுமதி அகழ்ந்தெறி
20. கேண்மை
மனங்கொள்
21. கைத்தொழில் கற்றறி
22. கொள்கைப்
பிடிப்புகொள்
23. கோபம்
குறைத்திடு
24. கௌவைத்
தூற்றொழி
25. சக்தி
நீயென்றறி
26. சாத்திரம்
பழகு
27. சிறுமைகள்
தகர்த்தெறி
28. சீர்தரா
உறுதிகொள்
29. சுறுசுறுப்புப்
பழகு
30. சூது மனந்தவிர்
31. செம்மாந்த
நடைகொள்
32. சேவை மனங்கொள்
33. சைனியப்
பயிற்சிகொள்
34. சொத்தினைப்
பெறமுயல்
35. சோதனை
எதிர்கொள்
36. சௌகரியம்
விருத்திசெய்
37. ஞமனை வெற்றிகொள்
38. ஞானச்
செருக்குகொள்
39. ஞிமிறுபோல்
இயங்கு
40. ஞெண்டின் பிடிப்புகொள்
41. தலைமை
விரும்பு
42. தாய்மை
போற்று
43. திறம்பா
மனங்கொள்
44. தீயோர்
விலக்கிவாழ்
45. துவளாச்
சிந்தைகொள்
46. தூய்மை
அகங்கொள்
47. தெளிவாய்க்
கருத்துரை
48. தேன்போல்
சொல்லுரை
49. தையலெனத்
தாழேல்
50. தொன்னெறி
போற்று
51. தோல்வியை
வீழ்த்து
52. நலிவை
மீட்டுயர்
53. நாணம்
நசித்திடு
54. நிமிர்ந்த
நடைகொள்
55. நீசரை
எதிர்த்திடு
56. நுண்ணறி
திறங்கொள்
57. நூல்கள்
இயற்றிடு
58. நெருப்பெனச்
சிவந்தெழு
59. நேரியப்
பார்வைகொள்
60. நைந்திடா
உளங்கொள்
61. நொந்திடா
உறுதிகொள்
62. நோக்கம்
விரிவுசெய்
63. பகுத்தறி
சிந்தைகொள்
64. பார்புகழ்
பெற்றிடு
65. பிற்போக்கு
நடைதவிர்
66. பீடுறப்
பழகு
67. புயலின்
வேகங்கொள்
68. பூவின்
மென்மைகொள்
69. பெண்விடுதலை
போற்று
70. பேச்சுரிமை
நிலைநாட்டு
71. பையென இயங்கேல்
72. பொறுப்புகள்
ஏற்றிடு
73. போலிமை
நீக்கு
74. பௌவச்
சீற்றங்கொள்
75. மடமை நீக்கு
76. மாதர்
நலம்பேண்
77. மிகையாய்ப்
பேசேல்
78. மீதம்
வைத்துவாழ்
79. முன்னுணர்
ஆற்றல்பெறு
80. மூதுரை
போற்றிவாழ்
81. மென்மை
துலங்கிடு
82. மேன்மை
விழைந்திடு
83. மைந்தர்ப்
பொறுப்புணர்த்து
84. மொட்டாய்
முகிழ்த்திடு
85. மோகம்
நீக்கு
86. மௌடியம்
அகற்று
87. யந்திரப்
பயன்கொள்
88. யாக்கை
வலிவுசெய்
89. யுகப்புரட்சி
செய்
90. யூகம்
ஆய்ந்தறி
91. யோகப்
பயிற்சிகொள்
92. யௌவன மனங்கொள்
93. ரகசியம்
பேணு
94. ரோஷம்
பெருக்கு
95. லட்சியப்
பார்வைகொள்
96. வரதட்சணைப்
பேயழி
97. வாழ்க்கைத்
தரம்உயர்த்து
98. விழுமியம்
பெறமுயல்
99. வீறுடன்
பழகு
100.வெற்றிகள் நாடிடு
101.வேலையில் சிறந்திடு
102. வையகம் போற்றவாழ்
No comments:
Post a Comment