Tuesday 24 September 2019

பச்சைப் பத்து - துளிப்பா


பச்சைப் பத்து

பச்சை மரகதங்கள்
பத்திரமாய் மூடிவை
ரெய்டுநடக்கலாம்!         

மதிலின் புறத்தே
ஏக்கத்துடன் பசுக்கள்
 தொட்டிச் செடிகள்!

நெகிழிப்பை
மென்று விழுங்கியது பசு
பச்சை வண்ணம்!
               
பச்சை
அடங்கிப்போகிறது நீலத்திற்கு
அரசு அலுவலகம்!

காற்று நகங்கள்
பச்சைமேனியில் வன்கொடுமை
வாழைஇலை!
                                                               
பசுமையாய் வயல்
மகிழ்ச்சியில் உழவன்
கொலு பொம்மை!

பச்சையம்மாள்
வகிடெடுத்து வாரினாள்
வரப்பு!

நனைந்த தலை(ழை)களைத்
துவட்டி விட்டது
காற்று!
               
திறந்தே கிடக்கிறது
பச்சை மாளிகை
மரம்!

தரையிறங்குமுன்
சிறிதாய்இளைப்பாறல்
இலையில் மழைத்துளி! 

நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா , நற்றமிழ்த் துளிப்பா நானூறு
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2017,  53-54.



No comments:

Post a Comment