Wednesday 25 September 2019

மலர்ப் பத்து - துளிப்பா


மலர்ப் பத்து

பிடித்துவைத்தன
இதழ்ப் பாத்திரங்கள்
மழைநீர்ச் சேகரிப்பு!        
               
தேன் சந்தை
கொள்முதலில்
தேனீக்கள்!

கொல்லும் பற்களிடையில்
பூமாலையாய்த் தொங்குகிறது
புலிக்குட்டி!

துள்ளி வருகிறது
வெள்ளை ரோஜா
நாய்க்குட்டி!

வண்டுகளின் இடம்தேடி
வந்தன தேன்மலர்கள்
பூக்கடை!     
                               
ஒற்றுமை
மணக்கிறது
பூந்தோட்டம்!

மஞ்சள் பூசிக்
குளித்தன
கொன்றை!

பூவின் சேமிப்பு
உறிஞ்சுகிறது
வரிவண்டு!

தலைவனைச் சுற்றியே
வாழ்விழக்கும் தொண்டன்
சூரிய காந்தி!

தெருவோரம்
கொட்டியது யார்?
நட்சத்திரங்கள்!     
                               
நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா , நற்றமிழ்த் துளிப்பா நானூறு
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2017, 55-56.

No comments:

Post a Comment